‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு Navesta Pharmaceuticals (Pvt) Ltd மற்றும் Citihealth Imports (Pvt) Ltd என்பன 10 மில்லியன் ரூபா நன்கொடை
டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களின் அன்றாட வாழ்வையும், பேரழிவால் பாதிக்கப்பட்ட நாட்டையும் மீண்டும் கட்டியெழுப்புவதற்காக ஆரம்பிக்கப்பட்ட ‘Rebuilding Sri Lanka’நிதியத்திற்கு, பல்வேறு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களிடமிருந்து நாளாந்தம் நன்கொடைகள் கிடைத்து வருகிறது.
அதன்படி, நேற்று புதன்கிழமை Navesta Pharmaceuticals (Pvt) Ltd மற்றும் Citihealth Imports (Pvt) Ltd என்பன தலா 05 மில்லியன் ரூபாக்களை நன்கொடையாக வழங்கியதோடு அதற்கான காசோலைகள் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமநாயக்கவிடம் கையளிக்கப்பட்டன.
இந்த நிகழ்வில், Navesta Pharmaceuticals (Pvt) Ltd சார்பாக சஞ்சய ஜயரத்ன மற்றும் வைத்தியர் ஜனக விக்ரமசிங்க ஆகியோரும் மற்றும் Citihealth Imports (Pvt) Ltd சார்பாக கபில சமரவிக்ரம மற்றும் இந்திக திசாநாயக்க ஆகியோர் கலந்து கொண்டனர்.