-யாழ் நிருபர்-
யாழ். கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உரும்பிராய் பகுதியில் 10 வயது சிறுமியை துர்நடத்தைக்கு உட்படுத்த முயன்ற 15 வயது சிறுவனை கோப்பாய் பொலிஸார் நேற்று திங்கட்கிழமை கைது செய்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் பாதிக்கப்பட்ட சிறுமி வைத்திய பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.