அமைச்சரவை தீர்மானத்துக்கு அமைய, 10 அத்தியாவசிய பொருட்களை ஜுலை 01 முதல் திறந்த கணக்கு முறைமை மூலம் இறக்குமதி செய்வதாக, சந்தை வணிக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இதன்படி, அரிசி, சீனி, பருப்பு, கிழங்கு, பால்மா, நெத்தலி உள்ளிட்ட 10 அத்தியாவசிய பொருட்களை திறந்த கணக்குள் மூலம் இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.