1 மணிநேரத்திற்கு 20 000 சம்பாதிக்கும் யாசகம் பெறும் பெண்

கொழும்பு – ஹைட் பார்க் பகுதியில் யாசகம் பெரும் பெண் ஒருவர் சுமார் ஒரு மணித்தியாலத்தில் கிட்டத்தட்ட 20, 700 ரூபா சம்பாதித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

மூன்று பிள்ளைகளுடன் யாசகம் பெற்ற போது குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான வழக்கு நேற்று முன்தினம் திங்கட்கிழமைகொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த விடயம் தெரியவந்துள்ளது.

இதேவேளை,  குறித்த பெண்ணின் பாதுகாப்பில் இருந்த 2 சிறுவர்களை சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்புமாறு நீதவான் உத்தரவிட்டார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்