ஹொரணை – கொழும்பு வழித்தடத்தில் இயங்கும் எண் 120 தனியார் பேருந்து உரிமையாளர்கள் சேவையில் இருந்து விலகியுள்ளனர்.
மில்லேவவிலிருந்து ஹொரணை வழியாக கொழும்பிற்கு பயணிக்கும் புதிய பேருந்து திட்டமானது உரிய நடைமுறைகள் இல்லாமல் இயங்குவதாக தெரிவித்தும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் இவ்வாறு சேவையில் இருந்து விலகியுள்ளனர்.
இந்த விடயத்திற்கு உரிய தீர்வு காணப்படாவிட்டால், எதிர்காலத்தில் ஏனைய வழித்தடங்களில் இயங்கும் பேருந்துகளும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் என ஹொரணை – கொழும்பு வழித்தட தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஜனக குணசிறி தெரிவித்துள்ளார்.