கம்பஹா, திவுலபிட்டிய – ஹொரகஸ்முல்ல பகுதியில் இளம் பெண் ஒருவர் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட 21 வயது சந்தேக நபரிடம் இருந்து 280,000 ரூபாய் பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.
மேலும் சந்தேக நபர் ஹெரோயின் கடத்தலில் ஈடுபட்டு வந்ததாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட குறித்த பெண் ஹெரோயினுடன் மினுவாங்கொடை நீதிமன்றத்தில் முன்னலைப்படுத்தப்பட்ட பின்னர், மார்ச் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.