ஹாட்லிக் கல்லூரியின் பழைய மாணவர்களால் பொலிதீன் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றல்
-யாழ் நிருபர்-
யாழ்ப்பாணம் வடமராட்சி ஹாட்லிக் கல்லூரியின் பழைய மாணவர்களால் பிளாஸ்டிக் மற்றும் பொலிதீன் அகற்றும் பணிகள் இன்று காலை 7:30 மணிமுதல் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
ஹார்ட்லி கல்லூரி பழைய மாணவர்கள் சங்கத்தினால் (HCPPA – Parent Body) ஹாட்லி கல்லூரியின் 185ஆவது ஆண்டு நிறைவு விழாவினை முன்னிட்டு பருத்தித்திறை நகரம் மற்றும் பருத்தித்துறை கடற்கரை ஓரம் ஆகிய பகுதிகளில் இந்த பிளாஸ்டிக் அகற்றல் செயற்பாடுகள் இடம் பெற்றுக் கொண்டிருக்கின்றன.
மேலும் பேக் டு ஹார்ட்லி “Back to Hartley” என்ற பெயரில் வருடாந்த ஒன்றுகூடலினை நடாத்த உள்ளது. “பிளாஸ்டிக் மாசுபாட்டிலிருந்து நமது சுற்றுச்சூழலைப் பாதுகாப்போம்” என்பதே இந்த ஆண்டின் தொனிப்பொருளாகும்.
இது இரண்டு நாள் நிகழ்வாக 2023 அக்டோபர் 7 மற்றும், 8 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்