திட்டமிடப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் குழுவின் உறுப்பினரான ஹரக் கட்டா என்ற நதுன் சிந்தக்க, குற்றப்புலனாய்வு திணைக்களத்திலிருந்து தப்பிச் செல்ல முயற்சித்தமைக்கு உதவி வழங்கிய பொலிஸ் கான்டஸ்பிள் உள்ளிட்ட நால்வர் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஹரக் கட்டா விசாரணையின் போது 2023ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 10ஆம் திகதி தப்பிச் செல்ல முற்பட்டார்.
அவரது முயற்சி தடுக்கப்பட்டு கைது செய்யப்பட்ட போதிலும் அவருக்கு உதவி வழங்கிய பொலிஸ் கான்ஸ்டபிள் நாட்டிலிருந்து தப்பிச் சென்றிருந்தார்.
இந்த நிலையில் குறித்த பொலிஸ் கான்ஸ்டபிள் உள்ளிட்ட நால்வர் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.