இலங்கையில் எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில், இலங்கையின் ஸ்ரீலங்கன் விமானங்களுக்கு இந்தியாவில் எரிபொருள் நிரப்பப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய அரசுக்கு சொந்தமான பாரத் பெற்றோலியம் இலங்கையின் விமானங்களுக்கு எரிபொருட்களை நிரப்பி வருவதாக, பாரத் பெற்றோலியம் தமது ட்விட்டரில் இதனை உறுதிப்படுத்தியுள்ளது.
இதன்படி, இலங்கையின் சுமார் 100 விமானங்களுக்கு இதுவரை, திருவனந்தபுரம், சென்னை மற்றும் கொச்சி விமான நிலையங்களில் எரிபொருள் நிரப்பப்பட்டுள்ளது.
கடந்த பதினைந்து நாட்களுக்கும் மேலாக, மிகக் குறுகிய அறிவிப்பில், இந்த எரிபொருள் நிரப்புதல் செய்யப்பட்டுள்ளது என பாரத் பெற்றோலியம் குறிப்பிட்டுள்ளது.
