-திருகோணமலை நிருபர்-
திருகோணமலை- உப்புவெளி பிரதேசத்தில் புதையல் தோண்டுவதற்கு பயன்படும் ஸ்கானர் மற்றும் உபகரணங்களுடன் பயணித்த 4 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அவர்கள் பயணித்த காரையும் பொலிஸார் கைப்பற்றினர்.
இச்சம்பவம் நேற்று புதன்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது
இவர்கள் அனுராதபுரம் மற்றும் திருகோணமலை பிரதேசங்களில் வசிக்கும் 23 வயதுக்கும் 36 வயதுக்கும் இடைப்பட்டவர்கள்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை திருகோணமலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் உப்புவெளி பொலிஸார் தெரிவித்தனர்.