வைரலான வீடியோ : பணி இடைநீக்கம் செய்யப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்!

கொள்ளுப்பிட்டியில் போக்குவரத்து சோதனையின் போது காரினுள் கஞ்சாவை வைக்க முற்பட்டதாக கூறப்படும் வீடியோவில் பதிவாகிய பொலிஸ் கான்ஸ்டபிள் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கிராண்ட்பாஸ் பகுதியில் இருந்து காரில் வந்த இளைஞர் குழு ஒன்றை தடுத்து நிறுத்திய கான்ஸ்டபிள், சோதனையின் போது வாகனத்தில் கஞ்சாவை வைக்க முயன்றதாக இளைஞர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

அது தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வீடியோ காட்சி சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டது

குறித்த வீடியோ வைரலாகி, அது பொலிஸாரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.

காரில் கஞ்சாவை வைத்து மிரட்டி பணம் பறிக்க முயன்றதாக பொலிஸ் அதிகாரி மீது இளைஞர் குழு குற்றம் சாட்டுவது வீடியோவில் பதிவாகியிருந்தது

சீருடையில் இருந்த போது வெற்றிலை மென்று தின்றமை மற்றும் முறையற்ற விதத்தில் வாகனச் சோதனை நடத்தியமை ஆகிய குற்றச்சாட்டின் பேரில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து குறித்த கான்ஸ்டபிள் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் கொள்ளுப்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க