-யாழ் நிருபர்-
யாழ்.தெல்லிப்பழை வைத்தியசாலையின் இன்று ஞாயிற்றுக்கிழமை மருந்து களஞ்சியசாலையில் ஏற்பட்ட மின்சார ஒழுக்கு காரணமாக தீப்பரவல் ஏற்பட்டது.
இந்த அனர்த்தத்தில் பெருமளவான மருந்துகள் எரிந்து நாசமாகின.
இதனை அவதானித்த இராணுவ வீரர் ஒருவர் விரைந்து செயற்பட்டு மேலும் ஏற்படவிருந்த அழிவினை தடுத்து நிறுத்தியுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

