அனுராதபுரம் பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இளைஞனின் கொலை தொடர்பில் பெண் ஒருவர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மோதலொன்றின்போது பலத்த காயமடைந்து அனுராதபுரம் பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த குறித்த இளைஞன் கடந்த 28ஆம் திகதி படுகொலை செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மாதவச்சி பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதுடைய நபரொருவரும், 23 வயதான அவரது மனைவியுமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
தாக்குதல் தொடர்பாக மேலும் மூவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்