வேற்றுகிரகவாசிகள் குறித்த உறுதிபடுத்தப்பட்ட தகவல்கள் இல்லாத போதிலும் அடையாளம் தெரியாமல் பறக்கும் பொருட்கள் தொடர்பான 650 வழக்குகளை விசாரணை செய்து வருவதாக அமெரிக்காவின் இராணுவ மையம் பென்டகன் அதிகாரி சீன்கிர்க்பேட்ரிக் தெரிவித்துள்ளார்.
மேலும் இது தொடர்பாக அவர் தெரிவிக்கையில்,
சமூக வலைதளங்களில் பரவுவது அனைத்தும் வதந்திகள் இது தொடர்பில் வலுவான ஆதாரங்கள் இதுவரை கிடைக்கவில்லை என கூறியுள்ளார்.
அதேவேளை, வேற்றுகிரகவாசிகள் தொடர்பான ஏதேனும் ஆதாரங்கள் கிடைத்தால் மக்கள் அதனை பென்டகனுக்கு உடனடியாக தெரிவிக்க வேண்டும் என சீன் கிர்க்பேட்ரிக் கேட்டுகொண்டுள்ளார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்