கொழும்பு பகுதியில் போதை பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வெள்ளவத்தை ப்ரட்ரிகா வீதியில் உள்ள தொடர்மாடி வீடொன்றில் இருந்து இரண்டரை கோடி ரூபா பெறுமதியான கொக்கைன் போதைப்பொருளுடனே இவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.