கடந்த ஜனவரி மாதம் மேற்கொள்ளப்பட்ட வெளிநாட்டு நாணயக் கொடுக்கல் வாங்கல் ஒன்றின் போதே இந்தத் திருட்டுச் சம்பவம் குறித்த தகவல்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.
இது தொடர்பாக இலங்கை கணினி அவசர பதில் பிரிவு, காவல்துறையின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவு, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மற்றும் மத்திய வங்கியின் நிதி உளவறிதல் பிரிவு ஆகியவற்றில் அமைச்சு முறைப்பாடுகளைச் செய்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து நடத்தப்பட்ட முதற்கட்ட உள்வாரி விசாரணைகளின் அடிப்படையில், சில அதிகாரிகளுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், விசாரணை முன்னெடுப்புகளுக்காகச் சட்டத்தை அமுல்படுத்தும் நிறுவனங்களுக்குத் தேவையான அனைத்து ஒத்துழைப்புகளையும் தகவல்களையும் வழங்கியுள்ளதாக அமைச்சு வலியுறுத்தியுள்ளது.
இலங்கைக்கும் வெளிநாடுகளுக்கும் இடையிலான உடன்படிக்கைகளுக்கு அமைய, சர்வதேச ஒருங்கிணைப்புடன் மேலதிக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் கணினி அமைப்பிற்குள் இணைய ஊடுருவிகள் நுழைந்து மேற்கொண்ட திருட்டுச் சம்பவம் தொடர்பில் தற்போது விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது.