பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வெளிநாட்டு சிகரெட்டுகளை கடத்த முயன்ற இலங்கைப் பயணி ஒருவரை, பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர்.
கடவத்தை சூரியபலுவ பகுதியை சேர்ந்த அழகுக்கலை நிபுணரான 27 வயதுடைய பெண்ணே இதன்போது கைத செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் நேற்று சனிக்கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு துபாயிலிருந்து ஃபிட்ஸ் ஏர் விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.
இதன்போது அவர் கொண்டுவந்த பயணப்பொதி 10,000 வெளிநாட்டு சிகரெட்டுகள் இருந்ததுடன் அவரிடம் இருந்த 50 அட்டைப் பெட்டி சிகரெட்டுகளை பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
குறித்த பெண் தற்போது பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டு, நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை நீர்கொழும்பு நீதவான் முன் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.