வெனிசுவேலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ அந்நாட்டில் நிலவும் இக்கட்டான சூழலை முன்னிட்டு தேசிய அவசரகால நிலையை அறிவித்துள்ளார்.
தனது நாட்டின் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் அனைத்தும் வெனிசுவேலாவிலுள்ள எண்ணெய் மற்றும் கனிம வளங்களைக் கைப்பற்றுவதற்காக அமெரிக்காவால் முன்னெடுக்கப்படும் சதி என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி, வெனிசுவேலா தலைநகர் கராகஸ் (Caracas) உள்ளிட்ட பகுதிகளில் உள்ள இராணுவ இலக்குகள் மற்றும் தளங்கள் மீது தாக்குதல் நடத்த உத்தரவிட்டதையடுத்து வெனிசுவேலா ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.