வெடி விபத்தில் சிக்கி 11 பேர் உயிரிழப்பு: 60 பேர் காயம்

இந்தியாவில் வெடி பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளதுடன் 60 பேர் காயமடைந்துள்ளதாக இந்திய ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மத்தியப் பிரதேச மாநிலத்தின் ஹர்தாவிலுள்ள கேளிக்கை வெடி பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலையிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதுடன் காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து தமது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்