-கிளிநொச்சி நிருபர்-
மருதங்கேனி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மருதங்கேனிப்பகுதியில் பொலிஸ் சிறப்பு பிரிவினருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய, வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளது.
அத்துடன், இருவர் சிறப்பு அதிரடி படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்
கைது செய்யப்பட்ட இருவரும் கடல் தொழிலுக்காக வெடிபொருட்களை சேகரித்து மீன் பிடி தொழிலாளர்களுக்கு வழங்குவது தொழிலாக கொண்டவர்கள் என விசாரணைகளில் தெரிய வந்துள்ளதாக மருதங்கேணி பொலிஸார் தெரிவித்துள்ளனர்
குறித்த இருவரையும் நாளை புதன்கிழமை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.