பதுளை பண்டாரவளை வீதியின் ஹல்பே பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை தனியார் பேருந்தில் மோதி பெண் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒரு பெண் படுகாயமடைந்துள்ளார்.
குடுகல்பதன, ஹெலஹல்பே, பண்டாரவளையில் வசிக்கும் 49 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயாரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்து ஹல்பே எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கும் கும்பல்வெல பகுதிக்கும் இடையே பயணித்த போது, வீதியோரம் நடந்து சென்ற இரு பெண்கள் மீது பேருந்து மோதியுள்ளது.
இதன்போது ஒருவர் உயிர் இழந்ததுடன் மற்றையவர் காயமடைந்து தெமோதர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் பேருந்தின் சாரதியான ரத்னபுர, பரகடுவ பிரதேசத்தைச் சேர்ந்த 40 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
உயிரிழந்த பெண்ணின் சடலம் தெமோதர வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை எல்ல பொலிஸார் மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.