-யாழ் நிருபர்-
யாழ். கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட உரும்பிராய் பகுதியில் நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை வன்முறை குழு ஒன்று தீயிட்டு எரித்துள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
உரும்பிராய் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் நிறுத்தி வைக்கப்பட்ட மோட்டார் சைக்கிளை, வீட்டுக்குள் நுழைந்த வன்முறை கும்பல் தீயிட்டு கொழுத்தியுள்ளது.
சம்பவத்தில் மோட்டார் சைக்கிள் முழுமையாக எரிந்து நாசமாகியுள்ள நிலையில் சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.