மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட கல்லடி உப்போடை விவேகானந்தா மகளீர் கல்லூரியில் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் விளையாட்டுப்போட்டி நேற்று முன்தினம் சனிக்கிழமை இடம்பெற்றது.
கல்லூரியின் அதிபர் நவகீதா தர்மசீலன் தலைமையில் சிவானந்தா தேசிய பாடசாலை மைதானத்தில் பி.ப 2.30 மணியளவில் விளையாட்டுப்போட்டி நிகழ்வுகள் நடை பெற்றன.
நிகழ்வில் பிரதம விருந்தினராக மட்டக்களப்பு மாவட்ட பிரதி கல்வி பணிப்பாளர் நிதர்ஷினி மகேந்திரகுமார், கலந்துகொண்டதுடன் விசேட விருந்தனராக, கோட்டைக்கல்வி பணிப்பாளர் ஆர்.ஜெ. பிரபாகரன் பங்கேற்றார்.
மேலும் பாடசாலையின் முன்னாள் அதிபர்கள் பழைய மாணவர்கள் புத்திஜிவிகள் பெற்றோர்கள் என பலரும் நிகழ்வில் கலந்துக்கொண்டனர்.