மருதமுனை மனாரியன் 88 அமைப்பின் ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டல்களின் கீழ் “மருதமுனை இளைஞர் விளையாட்டு கழகங்களுக்கு உதவுவோம்” எனும் நோக்குடன் மருதமுனையிலுள்ள விளையாட்டு கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்படுகின்ற நிகழ்வு மனாரியன் 88 அமைப்பின் பிரதான செயற்பாட்டாளர் ஐ.எல். முக்தார் முன்னெடுக்கின்றார்.
இது தொடர்பாக மருதமுனை மிமா விளையாட்டுக் கழகத்துடனான கலந்துரையாடல் பர்வின் ரெடிங் மற்றும் லதான் அக்ரோ இன்டர்நேஷனல் ஆகிய நிறுவனங்களின் நிறைவேற்று பணிப்பாளர் அல் ஹாஜ் கலீல் முஸ்தபா மருதமுனை ஆத்தியடி தோப்பில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றது.
இதன் போது மருதமுனை மிமா விளையாட்டு கழக கட்டமைப்புஇ முன்னேற்றம் மற்றும் எதிர்கால அபிவிருத்திகள் என்பன போன்ற விடயங்கள் தொடர்பாகக் கலந்துரையாடப்பட்டதுடன், மிமா விளையாட்டு கழக வளர்ச்சிக்கு உதவும் நோக்குடன் விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
மேலும் இந்நிகழ்வில் மருதமுனை இளைஞர் கழகங்களுக்கு உதவுவோம் என்னும் உதவி திட்டத்திற்காக அல் ஹாஜ் கலில் முஸ்தபாவை கௌரவிக்கும் வகையில் மருதமுனை மிமா விளையாட்டு கழகத்தினரால் பொன்னாடை போற்றி கௌரவிக்கும் நிகழ்வு நடைபெற்றது.
மேலும் பெறுமதியான விளையாட்டு உபகரணங்களை மிமா விளையாட்டுக் கழகத்துக்கு வழங்கி உதவிய அல் ஹாஜ் கலீல் முஸ்தபா மற்றும் மனாரியன் 88 பிரதான செயற்பாட்டாளர் ஐ.எல்.முக்தார் ஆகியோருக்கு நன்றிகளையும், பாராட்டுக்களையும் மிமா விளையாட்டு கழக செயலாளரினால் தெரிவிக்கப்பட்டன.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
