கம்பகாவில் பல்வேறு பிரதேசங்களில் உள்ள விற்பனை நிலையங்களின் கதவுகளை உடைத்து பெறுமதியான பொருட்களை திருடியதாக கூறப்படும் சந்தேக நபரொருவர் மினுவாங்கொடை பொலிஸாரால் நேற்று புதன்கிழமை காலை கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பொரகொடவத்த பிரதேசத்தில் வசிக்கும் 44 வயதுடையவர் ஆவார்.
மினுவாங்கொடை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் மினுவாங்கொடை – பொரகொடவத்த பிரதேசத்தில் வைத்து நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மினுவாங்கொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.