வியட்நாமில் தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட மண்சரிவில் பேருந்து மீது கற்பாறைகள் வீழ்ந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது.
அந்நாட்டின் கான் ஹோவா பகுதியில் மண்சரிவு ஏற்பட்டதால் அந்த வழியில் சென்று கொண்டிருந்த பேருந்து மீது பாறைகள் வீழ்ந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மண்ணுக்கு அடியில் சிலர் புதைந்ததால் மேலும் பலர் காணாமல் போயுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
காணாமல் போனவர்களைத் தேடும் நடவடிக்கைகள் நடைபெற்று வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.