-திருகோணமலை நிருபர்-
திருகோணமலை -ஹொரவ்பொத்தானை பிரதான வீதி மஹதிவுல்வெவ பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை இடம் பெற்ற விபத்தில் தாயும் மகனும் காயம் அடைந்துள்ளனர்.
ஹொரவ்பொத்தானை பகுதியில் இருந்து கோழி ஏற்றி வந்த லொறி மோதியதினாலேயே இவ்விபத்து இடம் பெற்றுள்ளது.
இதன் போது அதே பகுதியைச் சேர்ந்த 44 வயதுடைய தாயாரும், 18 வயதுடைய மகனுமே காயமடைந்துள்ளனர்.
காயமடைந்த இருவரும் மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மொரவெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.