வவுனியா பூந்தோட்டம் வீதியில் இன்று திங்கட்கிழமை மோட்டார் சைக்கிளுடன் கார் மோதி விபத்துக்குள்ளானதில் காரும் மோட்டார் சைக்கிளும் முற்றாக தீப்பற்றி எரிந்ததுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்து தொடர்பில் மேலும் தெரியவருகையில்இ
வவுனியா நகர் பகுதியில் இருந்து பூந்தோட்டம் நோக்கிச் பயணித்த காரும்இ பூந்தோட்டம் பகுதியில் இருந்து வவுனியா நகர் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.
இதனை அடுத்து இரு வாகனங்களும் தீப்பற்றி எரிந்த நிலையில் அங்கு கூடிய மக்களினால் தீயை கட்டுப்படுத்த முயற்சிகள் மேற்கொண்ட போதிலும் அது சாத்தியப்படவில்லை.
விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் காயம் அடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதோடு காரில் பயணித்தவர்களுக்கு எவ்வித சேதமும் ஏற்படவில்லை.
இந்நிலையில் வவுனியா நகர சபையின் தீயணைப்பு பிரிவினர் விரைந்து வந்து தீயை கட்டுப்படுத்த முயற்சித்தனர்.
எனினும் கார் மற்றும் மோட்டார் சைக்கிள் முழுமையாக எரிந்துள்ளள்ளதுடன்இ விபத்து தொடர்பான விசாரணைகளை வவுனியா போலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

