-கிண்ணியா நிருபர்-
கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிண்ணியா கொழும்பு பிரதான வீதியின் வில்வெலி பகுதியில் இடம் பெற்ற வாகன விபத்தில் கிண்ணியா பிரதேச சபையின் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் இன்று வியாழக்கிழமை இடம் பெற்றுள்ளது.
கிண்ணியா சூரங்கல் பகுதியை சேர்ந்த இப்னு (வயது 56) எனும் குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
லொறியுடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் லொறியில் பயணித்தவர் உயிரிழந்ததாக தெரிய வருகின்றது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரனைகளை கிண்ணியா பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்