நுவரெலியாவில் நேற்று வியாழக்கிழமை பி.ப 3 மணியளவில் உழவு இயந்திரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், இராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இராவணா கொட பகுதியைச் சேர்ந்த இராவணா கொட விஜயபாகு முகாமில் பணியாற்றிம் இராணுவ வீரரான கொட்டாஹேன பிட்டிய ஜயந்த ஜனித் ஹேரத் (வயது – 29) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
விடுமுறை நிமித்தம் வீட்டுக்கு வந்த குறித்த இராணுவ வீரர் விவசாய பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது இந்த விபத்து சம்பவித்துள்ளது.
சடலம் டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
திம்புள பத்தனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
