விஞ்ஞான ஆசிரியர் உவைஸ் எழுதிய மூன்று நூல்கள் வெளியீட்டு விழா

-எம்.எஸ்.எம்.ஸாகிர்-

விஞ்ஞானப் பாடத்தினை இலகு முறையில் கற்றுக்கொள்கின்ற வகையில் சாய்ந்தமருது லீடர் எம்.எச்.எம். அஷ்ரப் வித்தியாலயத்தின் விஞ்ஞானம் கற்பிக்கின்ற ஆசிரியர் எம்.எம்.எம்.உவைஸ் எழுதிய 03 விஞ்ஞான நூல்களின் வெளியீடு, திங்கட்கிழமை சாய்ந்தமருது லீடர் எம்.எச்.எம். அஷ்ரப் வித்தியாலயத்தில் நடைபெற்றது.

கற்பித்தலில் சுமார் 20 வருட அனுபவம் கொண்ட, இவர் எழுதிய விஞ்ஞான வினா – விடை தொகுப்பு அடங்கிய விஞ்ஞான தேனருவி தரம் – 06, விஞ்ஞான தேன் கிண்ணம் தரம் – 07, விஞ்ஞான தேன் கிண்ணம் தரம் – 09 ஆகிய 03 நூல்களே வெளியிடப்பட்டன.

பாடசாலை ஆசிரியர் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் பாடசாலையின் பிரதி அதிபர் ஏ.எம். நிசார் தலைமையில் இடம்பெற்ற இந்நூல் வெளியீட்டு விழாவில், சாய்ந்தமருது கோட்டக்கல்விப்பணிப்பாளர் என்.எம்.ஏ. மலிக் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டதோடு, சாய்ந்தமருது லீடர் எம்.எச்.எம். அஷ்ரப் அதிபர் எம்.ஐ.சம்சுதீன்இ சாய்ந்தமருது ஜீ.எம்.எம்.எஸ். அதிபர் எம்.ஐ. இல்லியாஸ், கல்முனை அல்-ஸுஹறா அதிபர் எம்.எச்.எஸ்.ஆர். மஜீதிய்யா, அல் – ஜலால் வித்தியாலய பிரதி அதிபர் டி.கே.எம். சிராஜ், லீடர் எம்.எச்.எம். அஷ்ரப் பிரதி அதிபர் எஸ்.எம்.சுஜான், ஆசிரியர் ஏ. ஷியாம் ஆகியோர் இந்நிகழ்வில் கௌரவ அதிதிகளாகவும் சேவைக்கான ஆசிரிய ஆலோசகர் (விஞ்ஞானம்) எம்.எஸ். சஹ்துல் அமீன் விசேட அதிதியாகவும் கலந்து சிறப்பித்ததோடு, பாடசாலை ஆசிரியர்கள் உட்பட மாணவர்களும் கலந்து கொண்டனர் .