மட்டக்களப்பு – வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிறைந்துறைச்சேனைப் பகுதியில், மாட்டை திருடி வீட்டில் வைத்து வெட்ட முயற்சித்த நபர் இன்று ஞாயிற்றுக்கிழமை தப்பியோடியுள்ளார்.
அடையாளம் காணப்படாத நபரின் மாட்டை திருடி இரகசியமான முறையில் வீடொன்றில் வைத்து வெட்டுவதற்கு தயாரான நிலையில் பொலிஸாருக்குக் கிடைத்த இரகசிய தகவலுக்கமைய குறித்த வீட்டை பொலிஸார் சுற்றிவளைத்துள்ளனர்.
இதன்போது, மாட்டை திருடிய பிரதான சந்தேக நபர் மதில் மேலாக பாய்ந்து தப்பிச் சென்றுள்ளார்.
மாடு வெட்ட உதவிக்கு நின்ற இருவரை வாழைச்சேனை பொலிஸார் விசாரணைக்காக தடுத்து வைத்துள்ளனர்.
மாடு வாழைச்சேனை பொலிஸாரின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.