கோறளைப்பற்று தெற்கு (கிரான்) பிரதேச செயலக பிரிவில் வாழைச்சேனை கமநல சேவைகள் நிலைய பிரிவுக்குட்பட்ட புணாணை மேற்கு கிராம சேவகர் பிரிவில் புணாணை மயிலந்தனை கமநல அமைப்புக்குட்பட்ட பகுதியில் பிடியளவு கமநிலத்துக்கு எனும் தொனிப்பொருளின் கீழ் கைவிடப்பட்ட நிலையில் உள்ள வயல் மற்றும் மேட்டு நிலங்களில் பயிரிடுவதற்காக விழிப்புணர்வூட்டும் செயற்பாடு நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.
கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சு, கமநல அபிவிருத்தி திணைக்களத்தினால் வாழைச்சேனை கமநல சேவைகள் நிலைய கமநல அபிவிருத்தி பிரதேச உத்தியோகத்தர் கோ. ஜெயக்காந்தன் தலைமையில் இடம்பெற்ற விழிப்புணர்வூட்டும் விளம்பரப் பாதாதைகள் மற்றும் அறிவுறுத்தல்கள் என்பன நிலைய உத்தியோகத்தர்கள் மூலம் வழங்கி வைக்கப்பட்டது.
மேலும் விளம்பரப் பாதாதைகள் பிரதேச செயலகங்களிலும் காட்சிப்படுத்தப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் நிலைய அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், விவசாய ஆராய்ச்சி உற்பத்தி உதவியாளர், முகாமைத்துவ உதவியாளர்கள், கமநல அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.