இலங்கையைச் சூழ தாழமுக்கப்பகுதி தொடர்ந்து நிலைத்திருப்பதால், எதிர்வரும் 19ஆம் திகதிவரை மழையுடனான வானிலை நீடிக்கும் என்று எதிர்வு கூறப்பட்டுள்ளது.
அத்துடன் இலங்கையின் தென்பகுதி கடற்பகுதி கொந்தளிப்பாகக் காணப்படுவதால் கடற்றொழிலாளர்களை அவதானமாகச் செயற்படுமாறு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் புவியியல் துறையின் தலைவரும், வானிலை ஆய்வாளருமான பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா எமது செய்திச் சேவைக்குக் கருத்து தெரிவித்தார்.
வடக்கு கிழக்குப் பகுதிகளில், பலத்த மழையுடன் மின்னல் தாக்கம் ஏற்படும் என்பதால், பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்