வாடகைக்கு வாகனங்களைக் கொள்வனவு செய்து விற்பனை செய்யும் மோசடியில் ஈடுபட்ட 45 வயதுடைய ஒருவர் அத்துருகிரிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேக நபர் 100 இற்கும் மேற்பட்ட சொகுசு வாகனங்களைக் கொள்வனவு செய்து விற்பனையில் ஈடுபட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
வெவ்வேறு பெயர்களில் சந்தேக நபர் வர்த்தக நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாகவும் ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மேலதிக விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.