
வாகன விபத்து: தலை துண்டிக்கப்பட்டு பெண் பலி
அநுராதபுரம் நொச்சியாகம பகுதியில் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் பெண்ணொருவர் தலை துண்டிக்கப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிர் இழந்துள்ளார்.
இராஜாங்கனைப் பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய பெண்ணே இவ்வாறு விபத்தில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மோட்டார்சைக்கிள் மீது சொகுசு பேருந்து மோதியதில் மோட்டார் சைக்கிளின் பின்னால் இருந்த பெண், பேருந்தின் சில்லுகளில் நசுங்கிய நிலையில் தலை துண்டிக்கப்பட்டதால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
குறித்த பெண் தனது கணவருடன் நொச்சியாகம நகரை நோக்கிப் பயணித்த போது விபத்துக்குள்ளானதாகவும், விபத்தில் கணவருக்கு சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சாரதி நொச்சியாகம நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
