
வாகன விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலி
பதுளையில் இன்று பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிர் இழந்துள்ளனர்.
பிபில – மஹியங்கனை பிரதான வீதியில் வேன் ஒன்றும் தனியார் பேருந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதியே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் மேலும் 6 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பதுளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்