-வவுனியா நிருபர்-
வவுனியா, தேக்கவத்தைப் பகுதியில் விடுதி ஒன்றில் பொலிஸார் மேற்கொண்ட விசேட சோதனையின் போது விபச்சாரத்தில் ஈடுபட்டதாக 4 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வவுனியா, தலைமைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையில் பொலிஸார் நேற்று வெள்ளிக்கிழமை இரவு விசேட கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இதன்போது தேக்கவத்தைப் பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் சோதனை செய்த போது அங்கு முறையான அனுமதியின்றி விபச்சாரத்தில் ஈடுபட்டதாக 4 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்கள் வவுனியா மற்றும் காலி ஆகிய இடங்களைச் சேர்ந்தவர்களாவர்.
மேலதிக விசாரணைகளின் பின் அவர்களை நீதிமன்றில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்