தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், மேற்கு மற்றும் தெற்கு கடற்பரப்புகளிலும், தீவின் தென்பகுதியிலும் பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும்.வடமேல் மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யும்.
ஊவா, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
மத்திய மலைப்பகுதிகளின் மேற்கு சரிவுகளில், மேற்கு மற்றும் தெற்கு மாகாணங்களில். மிதமான முதல் பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.