தற்போது நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. மேலும் இதே காலநிலை நீடித்தால், குடிநீர் விநியோகம் தடைப்படும் அபாயம் உள்ளதாக தெரிவித்துள்ளது.
வறட்சியான காலநிலை காரணமாக மின்சார தேவையும் அதிகரித்துள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
தினசரி மின் தேவை 45 கிகாவோட்டாக அதிகரித்துள்ளது. அதே வேளை மாலை ஏழு மணியளவில் அதிகபட்சமாக 2,097 மெகாவோட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவதாக இலங்கை மின்சார சபையின் மேலதிக பொது முகாமையாளர் தம்மிக்க என். நவரத்ன எமது செய்திப்பிரிவுக்கு தெரிவித்தார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்