மட்டக்களப்பு வந்தாறுமூலையில் நேற்று திங்கட்கிழமை இரவு 9 மணியளவில் மீண்டுமொரு விபத்து இடம்பெற்றுள்ளது.
வந்தாறுமூலை பிரதான வீதியூடாக பயணித்த லொறி மோட்டார்சைக்கிள் மீது மோதியதிலேயே இந்த விபத்து சம்பவித்திருக்கிறது.
விபத்தில் ஒருவர் காயமடைந்த வைத்தியசாலையில் அனமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்தின் போது மோட்டார்சைக்கிள் லொறியின் முன்பகுதியில் சிக்குண்டதுடன் மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் மோட்டார் சைக்கிளின் கீழ் பகுதியில் சிக்கி படுகாயமடைந்துள்ளார்.
இந்நிலையில் காயமடைந்த நபர் செங்கலடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

