-யாழ் நிருபர்-
யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை, மாவடியைச் சேர்ந்த தவச்செல்வம் பவித்திரன்
(23 வயது) கடத்திக் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் மேலும் 3 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் பிரதான சந்தேகநபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்ட மூவரும் வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவை சேர்ந்தவர்கள். நேற்று கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
யாழ்ப்பாணம் பொன்னாலையில் உள்ள கடற்படை முகாமில் தஞ்சம் புகுந்தவேளை அங்கிருந்து கடத்தப்பட்டு கடந்த 11ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட இந்த கொலைச் சம்பவம் தொடர்பில் ஏற்கனவே கைது செய்யப்பட்ட 6 சந்தேகநபர்கள் எதிர்வரும் 28ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.