வடமாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஜெகத் பளிகக்காரவுக்கு இடமாற்றம்

-யாழ் நிருபர்-

வடமாகாண மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஜெகத் பளிகக்காரவுக்கு உடன் நடைமுறைக்கு வரும் வகையில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

அந்த வெற்றிடத்துக்கு மூத்த பிரதிப் பொலிஸ் மா ஜெயந்த வீரசூரிய இடமாற்றப்பட்டுள்ளார்.

அதனடிப்படையில், வடக்கு மாகாண மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஜெகத் பளிகக்கார சமுக பொலிஸ் பிரிவுக்கு பொறுப்பாக செல்லவுள்ளதுடன், மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஜெயந்த வீரசூரிய, வடக்கு மாகாண மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.