ரோயல் பார்க் கொலை : மைத்திரி வழங்கிய பொதுமன்னிப்பு செல்லுபடியற்றது என நீதிமன்றம் தீர்ப்பு

பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய ராஜகிரிய, ரோயல் பார்க் கொலைச் சம்பவம் தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த ஜூட் ஷமந்த ஜயமஹாவுக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொதுமன்னிப்பு வழங்கியது அரசியலமைப்புக்கு எதிரானது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இதன்படி, குறித்த குற்றவாளிகளை விடுவித்து முன்னாள் ஜனாதிபதி வழங்கிய ஜனாதிபதி மன்னிப்பு செல்லுபடியற்றது என தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், மனுதாரருக்கு 10 இலட்சம் ரூபா நட்டஈடு வழங்குமாறும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன், பாதிக்கப்பட்ட பெண்ணின் தாய் மற்றும் தந்தைக்கு ஒரு மில்லியன் ரூபா நட்டஈடு வழங்குமாறு முன்னாள் ஜனாதிபதிக்கு மற்றுமொரு உத்தரவு நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்டது.

இந்த நடவடிக்கையின் மூலம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வேண்டுமென்றே அரசியலமைப்பை மீறியுள்ளதாகத் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், தற்போது வெளிநாட்டில் உள்ள குற்றவாளியை உள்ளூர் மற்றும் சர்வதேச சாசனங்களைப் பயன்படுத்தி இலங்கைக்கு அழைத்துவர தேவையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சட்டமா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளது.

குற்றவாளிக்கு வழங்கப்பட்டுள்ள ஜனாதிபதி பொதுமன்னிப்பு , அரசியலமைப்பிற்கு எதிரானது எனவும், அது செல்லுபடியற்றது எனவும் கோரி பெண்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் குழு சமர்ப்பித்த அடிப்படை உரிமை மனுவின் மீதான தீர்ப்பை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.துரைராஜா, யசந்த கோதாகொட மற்றும் ஜனக் டி சில்வா ஆகியோர் இந்த உத்தரவுகளை வழங்கினர் .

ராஜகிரிய பிரதேசத்தில் அமைந்துள்ள றோயல் பார்க் தொடர் மாடி வீடமைப்பு தொகுதியல் கடந்த 2005 ஆம் ஆண்டு ஜூன் 20 ஆம் திகதி 19 வயதான இவோன் ஜோன்சன் என்ற வெளிநாட்டு யுவதி கொலை செய்யப்பட்டிருந்தார்.

அவர் தாக்கப்பட்டு, கழுத்து நெறிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க