கொழும்பு – தம்புத்தேகம மற்றும் செனரத்கம ரயில் நிலையங்களுக்கு இடையில் இன்று புதன்கிழமை காலை ரயில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கொழும்பிலிருந்து அனுராதபுரம் நோக்கிப் பயணித்த ரயிலில் மோதி படுகாயமடைந்த குறித்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இந்த நபர் உயிரிழந்துள்ளார்.
65 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் தம்புத்தேகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.