மருதானை ரயில் நிலையத்தில் இன்று செவ்வாய் கிழமை காலை 10 மணியளவில் நடைமேடையின் கூரை மீது ஏறிய நபர் ஒருவர் தவறி விழுந்து படுகாயமடைந்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,
மருதானை ரயில் நிலையத்தின் நடைமேடையின் 5 மற்றும் 6 ஆவது கூரை மீது ஏறிய நபரை மருதானை பொலிஸாரும் மருதானை ரயில் நிலைய ஊழியர்களும் அவரை கூரையில் இருந்து இறக்குவதற்கு பல தடவைகள் முயற்சித்தும் அது பலனளிக்கவில்லை
இந்நிலையில் காலை 11.20 மணியளவில் அவர் மேற்கூரையில் நடந்து சென்றபோது கூரை உடைந்து நடைமேடையில் விழுந்து தலையின் பின்பகுதியில் காயம் ஏற்பட்டதால், உடனடியாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் கொண்டு செல்லப்பட்டுள்ளார்.