இந்தியாவின் புது டெல்லி ரயில் நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி நேற்று சனிக்கிழமை 15 பேர் உயிர் இழந்துள்ளனர்.
சம்பவம் குறித்து மேலும் தெரிய வருகையில்,
மகா கும்பமேளாவில் கலந்து கொள்ள புதுடெல்லி ரயில் நிலையத்தில் இருந்து பிரயாக்ராஜுக்கு இயக்கப்படும் பயணிகள் விரைவு ரயில் நேற்று இரவு 10 மணியளவில் பயணிக்க தயாராக இருந்தது.
இந்நிலையில் ஸ்வதந்திரா சேனானி விரைவு ரயில் மற்றும் புவனேஷ்வர் ராஜ்தானி ரயில் ஆகியவை தாமதாக இயக்கப்படுவதாக ரயில் நிலையத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த அறிவிப்பின் காரணமாக ரயில் நிலையத்தில் காத்திருந்த பயணிகள் பிரயாக்ராஜ் விரைவு ரயிலில் ஏற ஒரே நேரத்தில் முயற்சித்தனர்.
இதன்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி சிலர் மயக்கமுற்றதுடன் பலர் காயமடைந்துள்ளனர். மேலும் 3 குழந்தைகள் உட்பட 15 பேர் உயிரிழந்தாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.