ஒஹிய ரயில் நிலையத்துக்கு அருகில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை எல்ல ஓடிசி ரயில் இருந்து வீழ்ந்து சுற்றுலா பயணியொருவர் காயமடைந்துள்ளதாக ஹப்புத்தலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சுற்றுலாப் பயணி கண்டியிலிருந்து எல்ல நோக்கிப் பயணித்த சீனாவைச் சேர்ந்த 35 வயதுடைய பெண் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தில் காயமடைந்த குறித்த பெண், ரயில் பணியாளர்களால் மீட்கப்பட்டு ஹப்புத்தலை ரயில் நிலையத்துக்குக் கொண்டுவரப்பட்டு, சிகிச்சைகளுக்காக தியத்தலாவ ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.