பதுளையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த ரயிலில் இருந்து இன்று புதன் கிழமை காலை தவறி விழுந்த ரஷ்ய நாட்டு பிரஜை உயிரிழந்துள்ளார்.
ரஷ்ய நாட்டு பிரஜையான பெர்மினோவா ஒல்கா (வயது – 51) என்பவரே இவ்வாறு உயிர் இழந்துள்ளார்.
பதுளை புகையிரத நிலையத்திலிருந்து ஒரு கிலோமீற்றர் தொலைவில் உள்ள அமுனுவெல்பிட்டிய பகுதியில் உள்ள சுரங்க பாதையை கடந்து ஒடும் ரயிலில் செல்ஃபி எடுத்துக்கொண்டிருந்த குறித்த பெண் ரயில் பாதை ஓரமாக இருந்த கற்களில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
சடலம் அதே ரயிலில் ஹாலிஎல புகையிரத நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து பதுளை போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு பதுளை போதனா வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹலிலெல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
