
ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்குமாறு மஹிந்த ராஜபக்ஷவிடம் கோரிக்கை
ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானி சாகல ரத்நாயக்க, கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருக்கிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில், சுயேச்சையாகப் போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்குமாறு கொழும்பு – விஜேராம மாவத்தையில் உள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இல்லத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேநேரம், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயற்குழுக் கூட்டம் நாளை இடம்பெறவுள்ளதாகவும், இதன்போது இது தொடர்பான இறுதித் தீர்மானம் அறிவிக்கப்படும் எனவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்